Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Wednesday, March 14, 2012

ரயில்வே பட்ஜெட் - ரசிக்க வைத்த பட்ஜெட் -2012-13 : முக்கிய அம்சங்கள்!


 பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தும், பயணிகள் கட்டணத்தை சற்றே உயர்த்தியும் 2012-13 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார், அமைச்சர் தினேஷ் திரிவேதி.
மக்களவையில் 2012-13 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் தினேஷ் திவாரி புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு தாக்கல் செய்தார்.
ரயில்வே துறையின் பாதுகாப்பை உலகத்தரத்துக்கு உயர்த்தவும், நவீனத்தன்மைகளைப் புகுத்தி மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை அறிவித்த திரிவேதி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார். 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அவர் தனது படஜெட் உரையைத் தொடங்கினார்.
"கடந்த கால வரலாற்றில் இருந்து நான் பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன். ரயில்வே பாதுகாப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதை என்பதை உறுதி செய்கிறேன்.
ஐரோப்பாவில் மிகச் சிறப்பான பாதுகாப்பு உள்ளது. நமது தேசத்தில் உயிரிழப்பு இல்லா ரயில்வே துறை என்பது நமது இலக்கு," என்றார். 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான தினேஷ் திரிவேதி தனது முதல் ரயில்வே பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்: 
பாதுகாப்புக்கு முன்னுரிமை...
* தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக ககோத்கர் கமிட்டி அளித்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும் மாற்றப்பட திட்டம். 
லெவல்கிராசிங்கை மாற்றுவதற்காக சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* பயணிகளின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகள் திருப்தியாக இல்லை. அவை மேம்படுத்தப்படும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வே துறைக்கான முதலீடு ரூ.7.35 லட்சமாக இருக்கும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.16,842 கோடி ஒதுக்கப்பட திட்டம்.
* பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 5,741 கோரிக்கைகள் ரயில்வே துறைக்கு வந்துள்ளன.
* வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.4,410 கோடி.
* 2011-ம் ஆண்டு ரயில் விபத்து விகிதம் 0.77 சதவீதத்தில் இருந்து 0.55% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளால் 40 சதவீத விபத்துகள் நிகழ்கின்றன.
நவீனமயமாக்க நடவடிக்கை...
* நவீன மயமாக்கல் இல்லாமல் ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த முடியாது.  
* மத்திய அரசின் ரயில்வேக்கான மொத்த பட்ஜெட் ஆதரவு ரூ.24 ஆயிரம் கோடியாக உள்ளது. 
* 80 சதவீத போக்குவரத்துக்கு காரணமாக இருக்கும் 19,000 கிலோ மீட்டர் தண்டவாளங்கள் நவீனமயமாக்கப்படும்.
* 2012-13 ஆம் ஆண்டுக்கான ரயில்வே வருடாந்திர திட்டச் செலவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.60,100 கோடியாக உள்ளது.
* ரயில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் ஏற்படுத்தப்படும்.
* 2012-13 நிதியாண்டில் 20,000 வேகன்கள் தயாரிக்கப்படும்.
* டபுள் டக்கர் ரயில்வே கன்டெய்னர்கள் தயாரிக்க திட்டம். 
வேகக் கட்டுப்பாடு..
* ரயில்களின் சராசரி வேகம் 160 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்படும். 
* 487 திட்டங்களுக்கு உடனடியாக நிதி தேவை. 
* புதிய சிக்னல்கள் அமைக்க, சிக்னல்களை மேம்படுத்த ரூ.39,111 கோடி தேவை.
* 700 கிலோமீட்டருக்கு இருவழிப் பாதைகள் அமைக்கப்படும்.
வருவாய் இலக்கு ரூ.50 லட்சம் கோடி...
* மும்பை ரயில்வே விகாஸ் கழகம் அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
* ரயில்வே மூலம் ரூ.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்க நடவடிக்கை. 
* ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 'ரயில் கேல் ரத்னா விருது' அறிமுகம்.
* ரயில்வே வாரியம் மறு சீரமைப்பு செய்யப்படும்.
* நவி மும்பையில் கோச்சிங் காம்ப்ளக்ஸ் மற்றும் ரயில் முனையம் அமைக்கத் திட்டம்.
* புதிதாக 6,500 கி.மீ. தூரம் மின்மயமாக்க திட்டம். உத்தரம்புரா, ஸ்ரீநகர், பாரமுல்லா பாதைகள் மின்சாரமயமாக்கப்படும்.
* கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
சென்னை ராயபுரத்தில் முனையம்...
* கேரளா உள்பட 4 இடங்களில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.
* சென்னை ராயபுரத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்கப்படும். 
* அனைத்து ரயில்களும் விமான நிலையங்கள் போல் மேம்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் 11,250 ரயில்வே பாலங்கள் அமைக்கப்படும். அனைத்து சிக்னல்களும் நவீனமயமாக்கப்படும்.
* வடகிழக்கு மாநிலங்கள் காஷ்மீரை இணைக்க புதிய திட்டங்கள்.
* வரும் ஆண்டில் 14 புதிய ரயில் பாதைக்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* 800 கிலோ மீட்டர் தொலைவிலான பாதை அகலப் பாதையாக மாற்றப்படும். ரூ.1950 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாநில அரசுகளின் உதவியோடு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான 31 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
புதிய ரயில்கள் எத்தனை?
* 2012-13 நிதியாண்டில் 21 பயணிகள் ரயில்கள், 75 எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
* புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.
* ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலை உற்பத்திக்கு தயாராக உள்ளது.
* பிலாஸ்பூரிலிருந்து நேபாளத்துக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
* மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ரயில் பெட்டிகள் அமைக்கப்படும்.
* சென்னை, மும்பை, கொல்கத்தா புறநகர் ரயில்சேவை விரிவாக்கப்படும். அவற்றின் சேவைகளும் அதிகரிக்கப்படும்.
பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு
* 10 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
* மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்புக் கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 பைசா உயர்வு.
* ஏ/சி முதல் வகுப்பு ரயில்களில் 3 அடுக்கில், கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்வு.
* புறநகர் மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு.
* பிளாட்பார டிக்கெட் விலை ரூ.5 ஆக உயர்வு.
* மின்சார ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா.
* ஸ்லீப்பர் கிளாஸ் கட்டணம், கிலோ மீட்டருக்கு 5 பைசா உயர்வு.
* ஏ/சி முதல் வகுப்பு ரயில்களில் 2 அடுக்கில், கிலோ மீட்டருக்கு 15 பைசா உயர்வு.
* ஏ/சி சேர் கார், ஏ/சி 3 அடுக்கு படுக்கைகள் மற்றும் முதல் வகுப்பு கட்டணம், கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசா உயர்வு.
* டெல்லி - சென்னை கட்டணம்: இரண்டாம் வகுப்பு ரூ.43 உயர்வு; ஏ/சி. 3 அடுக்கு - ரூ.217 உயர்வு; ஏ/சி. முதல் வகுப்பு ரூ.435 உயர்வு.
டெல்லி - சென்னை முதல் வகுப்பு ஏ/சி கட்டணம் ரூ.623 உயர்வு
தமிழகத்துக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் மற்றும் நீட்டிக்கப்படும் சேவைகளின் விவரம்:
* கோவை – பிகானீர் எக்ஸ்பிரஸ் : கோவையிலிருந்து அகமதாபாத், ஜோத்பூர் வழியாக பிகானீக்கு முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும்.
* சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இரண்டு அடுக்கு விரைவு ரயில் தினமும் இயக்கப்படும்.
சென்னை - பூரி (ஒடிஷா) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.
* திருச்சி – நெல்லை இடையே தினமும் இன்டர்சிட்டி ரயில்.
* விசாகப்பட்டினம் – சென்னை வாராந்திர விரைவு ரயில்.
* கச்சிக்குடா – மதுரை இடையே வாராந்திர விரைவு ரயில்.
* ஷாலிமார் – சென்னை இடையே வாராந்திர விரைவு ரயில்.
* மன்னார்குடியில் இருந்து திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக திருப்பதிக்கு விரைவு ரயில். இது, வாரம் மூன்று முறை இயக்கப்படும்.
* விழுப்புரம் - காட்பாடி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்.
* விழுப்புரம் – மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில்.
* பாலக்காடு – கோவை – ஈரோடு மார்க்கத்தில் மெயின்லைன் எலெக்ட்ரிக்கல் மல்டிப்பிள் ரயில்.
* மன்னார்குடி – திருச்சி – மானாமதுரை டீசல் எலெக்ட்ரிக்கல் மல்டிப்பிள் ரயில்.
* ஈரோடு - கோவை வழியாக தாதர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படும். 
* நிஜாமுதீன் - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரம் 2 முறை இயக்கப்படும்.
* திருப்பதி - மதுரை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு.
* மங்களூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ், கோவை வரை நீட்டிப்பு.
* மங்களூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு.
* திருச்சி - நாகூர் பயணிகள் எக்ஸ்பிரஸ் நாகப்பட்டிணம் வரை நீட்டிப்பு.
* அரக்கோணம் - நந்தலூர் ரெயில் கடப்பா வரை நீட்டிப்பு.
* மதுரை - திருப்பதி வாரம் 2 நாள் இயங்கும் எக்ஸ்பிரஸ் 3 நாட்களாக அதிகரிப்பு.
சென்னை மெட்ரோ ரயில் எப்போது?
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு (2013) நிறைவடையும் என்று ரயில்வே அமைச்சர் திரிவேதி அறிவித்தார்.

0 comments:

Post a Comment