Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Saturday, April 7, 2012

ஓடி போய் கல்யாணம் செய்வது எப்படி

மு.கு : பின் வரும் வாக்கியங்களை பேஸ் வாய்சில் படிக்கவும் ( வைரமுத்து,பாரதி ராஜா உங்கள் விருப்பம்)

பல வரலாறுகளை தரவல்லது
நினைவுகளை கனவுகளோடு அள்ளி செல்லும் திறனுடையது 
உறக்கம்  தொலைக்கும் இரவுகளின் காரணமிது
மீசை  முளைக்கும் போதே முளைப்பது 
இந்த காதல்..


ம.கு(மறுபடியும் குறிப்பு): நார்மல் வாய்ஸ்க்கு வரவும் 


  எதையோ ஒன்னை காதல் அப்புடின்னு நம்பி எதனா ஒரு பொண்ண பாத்து பீல் பண்ணி லவ் பண்ணும் மகா ஆண்களே இது உங்களுக்கான பதிவு தான்..அதனால பெண்களுக்கு ஒன்னும் இல்லன்னு பீல் பண்ணாதிங்க இந்த பதிவ உங்க ஆள படிக்க சொல்லுங்க..கல்யாணம் ஆனா அங்கிள் ஆன்டி யாராவது இருந்தா  உங்க பழைய ஆட்டோக்ராப் நெனச்சிகொங்க..இதுக்கு மேல தான் லவ் பண்ணனும் அப்புடின்னு ஜோடியாக வரவங்க எல்லாரையும் உத்து பாத்தபடியே அலையும் சிங்கிள் சிங்கங்களே futureல கண்டிப உதவும் மேல படிங்க. முட்டி மோதி முட்டி தெரியிற மாதிரி ஜீன்ஸ் எல்லாம் போட்டுட்டு பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டான்ட போய் லேகியம் விக்கறவன் மாதிரி அலஞ்சு திரிஞ்சு..எதோ நம்ம பெர்சனாலிட்டிக்கு(அதெல்லாம் இருக்கான்னு கேக்க கூடாது ) ஏத்த ஒரு பட்டை ஜிலேபியை(வார்த்தை உபயம்:சிறுத்தை சந்தானம்) உஷார் பண்றோம்..அதுக்கு பிகர் இல்லாத வருத்தப்படும் வாலிப சங்க தோஸ்துகளுக்கு  ட்ரீட் வச்சி வெறுப்பு ஏத்தறோம்.. நம்ம பிகர் சந்தோஷ் சுப்பிரமணி ஹாசினி மாதிரு இருக்கணும் கண்டேன் காதலை அஞ்சலி மாதிரி இருக்கணும் அப்புடின்னு கனவு கண்டு கிடப்போம் ஆனா நம்ம மூஞ்சிக்கு என்ன வருமோ அதான் வரும் (தினமும் கண்ணாடி பாக்கறோம்ல)


 டாட்டா சுமோவில் வரும் தமிழ் படம் வில்லன் தான் அப்பன்னா இருப்பான்னு நெனச்சா, பிஞ்சு போன மண்டையோட ஒருத்தன நம்ப ஆள் இவுரு தான் எங்க டாடின்னு போட்டோ காட்டுவா..ச்சே சண்டையெல்லாம் போட்டு கெத்தோட தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணலாமுன்னு நைட் புல்லா யோசிச்சதல்லாம் வீணா போய்டும்..சரி அண்ணானாவது அர்னால்ட் மாதிரி இருப்பானு பார்த்தா அவிஞ்சு போன கண்ணோட அறை வாழைப்பழம் மேல விழுந்தாலே சங்கு உதுற ரேஞ்சுல இருப்பானுக.நமக்கு சுவாரசியம் தான் வண்ணம் பாஸ் ஓடி போய் தான் கல்யாணம் பண்ணறோம் (அரேஞ் மேரேஜ் பண்ணா த்ரில் இருக்காது.. அவ்வவ்) 

இப்போ ஓடி போற மேட்டர்க்கு வருவோம்(என்னோட future மாமனார் இத படிக்க கூடாது கடவுளே(?!)).நாம லவ் பண்ணற பொண்ணு எல்லுனு சொன்ன எண்ணெய்யா இருக்க தேவை இல்லை(அது அதிக பிரசங்கி தனம்)..எல்லுனு மறுபடியும் சொன்ன போதும்..ஓடி போவதற்கு  ஒரு வாரம் முன்னாடிமானே தேனே அப்புடின்னு ஒரு பத்து forward SMS அனுப்பி கனவுல டூயட் ( லண்டன்,நியூயார்க் கிளைமேட் நல்ல இருக்குன்னு நியூஸ் ரீடர் பாப்பா சொல்லுச்சு) பாடுற மாதிரி செய்து கொள்ளவும்.நேர்ல மீட் பண்ணும போதெல்லாம் ரெண்டு மூனு வாரமலர் கவிதை சொல்லி அசத்தவும் ( சாம்பிள் கவிதை :  நிலவு வந்தது!! அது நடந்து வந்தது!!..  நான் கூட கொஞ்சம் கிறுக்கி வச்சி இருக்கேன் ...இங்கே அப்புடியே மேல பீல் பண்ணி சொல்லவும்). முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு ( அப்போ இவ்வளோ நேரம் சொல்லவே இல்லையானு கேட்க கூடாது) ஓடி போனா எவ்வளோ பேறு தூரத்தி வருவாங்கன்னு தோராயமா தெரிஞ்சி வச்சிக்கணும். ஹாஸ்பிடல் செலவுக்கு காசு கூட ரெடி பண்ணிக்கலாம்.
 இவுளுக குடுக்குற இம்சைக்கு  கல்யாணம் பண்ணி தான் ஆகணுமா அப்புடின்னு என்னைக்கு தோணுதோ அன்னைக்கு தான்நீங்க முழுசா காதல் சந்திரமுகியா மாறுரீங்க( ரா ரா ரா ஓடி போக ரா ரா அப்புடின்னு ஒரு tune ஹாரிஸ் கிட்ட சொல்லி இருக்கேன்..அப்பறமா இதில் இணைத்திடலாம் ). மனசுக்குள்ள ஆல் இஸ் வெல் அப்புடின்னு ஒரு இருவது தடவ சொல்லிட்டு .. உங்க அப்பா recharge பண்ணின மொபைல இருந்து "நாளைக்கு நைட்டு பத்து மணிக்கு ஓடி போறோம்" அப்புடின்னு ஒரு மெசேஜ் தட்டி விட்டுருங்க..

"ஏன் என்கிட்ட கேக்காமலே முடிவு எடுக்கிற.."

"இப்போல்லம் நீ முன்ன மாதிரியே இல்ல."

"என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே மாட்டுற."

"நீ என்கிட்டே எதையோ மறைக்கிற"

"இவ்வளோ நேரமா யாரு கிட்ட பேசி கிட்டு இருந்த"

"உனக்கு நான் முக்கியமா இல்ல உன் பிரண்ட்ஸ் முக்கியமா  "

 தக்காளிதெரிஞ்சு போச்சா இந்த பொண்ணுகள பத்தி.. அதுக்கு அப்பறம எதுக்கு ஓடி போய்கிட்டு .. போய் பொழப்ப பாருங்க அண்ணே...( நோ பேட் வோர்ட்ஸ்)


மாரல் ஆப் த ஸ்டோரி:  நல்லா இருப்போம் நல்லா இருப்போம் மம்மி டாடி பாத்து வைக்குற பொண்ண கட்டினா நல்லா இருப்போம்)


பி.கு:  ஓடி போக நான் ரெடி.. யாராவது ப்ரீயா இருந்தா refer  பண்ணவும்

0 comments:

Post a Comment