Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Monday, November 12, 2012

துப்பாக்கி சினி மேகம் பார்வையில் ரேட்டிங் 4/5


துப்பாக்கியை முருகதாஸ் இயக்குகிறார் என்றவுடன் ,7 ஆம் அறிவிலே இவரிடம்  இருந்த அனைத்து புல்லட்களும்  தீர்ந்து விட்டதே ,இந்த "துப்பாக்கி" வெடிக்கும்மா என நினைத்தேன்...எதிர்பார்ப்பை பொய்யாக்கி, புல்லா லோட் பண்ணிக்கிட்டு வந்துருக்காரு .படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் முருகதாஸ் தெரிகிறார்.


மாறிவரும் சினிமாவிற்கு ஏற்றார் போல் மாறி நடித்திருக்கிறார் விஜய்.இவரது சமீபத்திய படங்களில், அறிமுக  காட்சிகளில் தவறாமல் ட்ரைன் இடம்பெற்று  விடுகிறது .ஓடும்  டிரைனில் , விஜய் பறந்து வந்து ஏறுவது  போல் காட்சி அமைத்து விடுவார்களோ என்ற பதைபதைப்புடன்  பார்த்தேன் ..ஆரம்ப பாடல் காட்சியில் கூட லாஜிக் மீறாமல் புத்திசாலித்தனமா ,டிரெயின் பழுதடைந்து நிற்பது போல் காட்சி அமைத்து விடுகிறார்கள் .தீவிரவாதிகளை விரட்டி விரட்டி வேட்டையாடி வதம் செய்யும் கேப்டன்,சுதந்திர தினத்தன்றே, பிறந்ததாலோ என்னவோ நாட்டுபற்று கொண்ட படங்களில் மட்டுமே நடிக்கும் அர்ஜுனும் ரிட்டயர்ட்  ஆகிவிட்டத்தால் ,விஜயும் ,சூர்யாவும் அந்த பணியை ஏற்று கொண்டார்கள்.அந்த வரிசையில் தீவிரவாதியை வேட்டையாடும் 1001 வது படம் .


விஜய்க்கு இரண்டு அழகான தங்கைகள் இருந்தும் ,"எங்க அண்ணன் வேலாயுதம் வருவாண்டா" போன்ற அபத்தமான   வசனங்கள் .இல்லாததது ஆறுதல் ...விஜய் கொஞ்சம் வெயிட் போட்டு,முறுக்கேறிய உடலுடன்,கொஞ்சம் கூடுதல் அழகாகவே இருக்கிறார்...இந்த  படத்தில் பஞ்ச் வசனங்களை குறைத்து, புத்திசாலித்தனமான  காட்சியில் நடிப்பதற்கு சம்மதித்திருக்கிறார்..
ஒரு போலீசை , தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள வைப்பதும் ,
12 தீவிரவாதிகளை ஒரே நேரத்தில்  சுட்டு வீழ்த்துவது ,சிங்கத்தின் குகைக்குள் தனி ஆளாய் சென்று, தங்கையை பணைய கைதியாய் வைத்து மீட்பது .


உடம்பில்  மைக்ரோசிப் வைத்துக்  கொண்டு, வில்லன் இருக்குமிடத்தை தேடுவது ,முருகதாஸ் "டைரக்சன்"  பளிச்சிடும் இடங்கள்.ஒரு ஆங்கில படத்திலும் இதே போன்று காட்சி வருகிறது என்றார் தியேட்டரில்  ஒருவர்  ...அவன் அவன ஒரு படத்தையே சுடுறான் ..ஒரு காட்சி எடுத்தா.. தவறா என்கிறார் முருகதாஸ்.தேவையில்லாமல், பஞ்ச் டயலாக் பேசாமல், தேவைப்படும்போது மட்டும் பேசுகிறார் ....அதிலும் ...
villan I dont know  who you are ,where are you from ,i am coming for you ..once i get to you ..i will kill you..
Vijay: I am waiting .....

மற்றொன்று "ஒன்னும் புரியலயா ..சஸ்பென்ஸ் ஓடே செத்துரு" ,,,
என்று விஜய் சொல்வதும் ,இந்தத்  தீபாவளியின் பட்டாசு ...

காஜல் அகர்வால் பாடல்களில் நடித்திருக்கிறார் .ஜெயராமை வைத்து திணித்திருக்கும் காட்சிகளை குறைத்திருந்தால், படத்தின் வேகம் கூடியிருக்கும் .
சத்தியன் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்திருக்கிறார் .நமிதாவின் தம்பி போல் மாறிக்கொண்டு வருகிறார்.
"கூகுல் கூகுல்",குட்டி புலி கூட்டம்  பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.
"கூகிள் கூகிள்" பாடலின் போது ,"இந்தப்  பாடலை பாடிக்கொண்டிருப்பது உங்கள் விஜய்"ன்னு வராதது ஏமாற்றம் .

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் ஹாரிஸ் ஜெயராஜாவின் பின்னணி இசை நன்றாக உள்ளது.
முருகதாசுக்கும் தன் முகத்தினை திரையில் காட்டும் ஆசை வந்து விட்டது .நல்லவேளை பேரரசு போல பஞ்ச் டயலாக் பேசி ,நம்மை பஞ்சராக்காமல் கூகுல் கூகுல் பாடலில் வந்து போகிறார் .பக்கத்தில் நிற்பவனை ஓங்கி ஒரு அறை விட்டவாறே ,high  டெசிபலில், காட்டு கத்து கத்தி கொண்டே அறிமுகமாகும், வழக்கமான வில்லனாக இல்லாமல் ,அமைதியாய் அறிமுகமாகி, அளந்து பேசி அமர்க்களபடுத்தியிருக்கிறார் வித்யுத்  ஜாம்வால்(Vidyut Jamwal-பில்லாII வில்லன்).எவனாவது மிலிடரி யூனிபோர்ம் போட்டுக்கிட்டு பொண்ணு பார்க்க போவனா ன்னு ?,டிரைலர்  பார்த்தே  கதை சொல்வோர்,படம் பார்த்து புரிந்து கொள்ளவும்.


கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் .
போக்கிரிக்கு பிறகு விஜய்க்கு ஒரு  உண்மையான வெற்றி படமாகவும் ,ரமணாவில் பெற்ற புகழைத்  தக்க வைத்து ,கஜினி இயக்குனரை ரஜினியாக்கி இருக்கிறது இந்த துப்பாக்கி .
மொத்தத்தில் துப்பாக்கி விஜய் ரசிகர்களையும் ,அஜித் ரசிகர்களையும் ஏமாற்றி இருக்கிறது ..குழம்ப வேண்டாம் ...குத்து பாடலோடு அறிமுகமாகி ,பஞ்ச் டயலாக்கில் பட்டய கிளப்பும் ,நம்ம விஜய் அண்ணா இல்லையேன்னு , விஜய் ரசிகர்களும் ,இந்தப்  படத்தில் விஜயை களாய்க்க  முடியாதே என்று அஜித் ரசிகர்களும் ......

மொத்தத்தில் துப்பாக்கி பட்டய கிளப்பும் ...
எனது ரேட்டிங்  4/5

0 comments:

Post a Comment