Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Sunday, March 11, 2012

பாட்டி சொன்ன கதைகள்

கதை சொல்றது ஒரு பெரிய கலை, எனக்கு தெரிஞ்ச மிக சிறந்த கதைசொல்லி என்னோட பாட்டிதான் பக்கத்துல படுக்க வச்சுட்டு அவங்க சொல்ற பாட்டி வடை சுட்ட கதையே அவ்ளோ பிரமாண்டமா இருக்கும் பெரும்பாலும் பாட்டியின் கதை ஒரு "ஊரு"லனுதான் ஆரம்பிக்கும். பாட்டி சொல்ற ஊருல மட்டும் வில்லன் கூட நல்லவனா இருப்பான் நம்ம ஹீரோ அவன விட நல்லவனா இருப்பாப்ல மத்தபடி பாட்டியின் கதைகளில் கதாபாத்திரங்கள் அனைத்தும் பேசும். எலி,முயல்,காக்கா,மயில் இப்டி பாட்டி சொல்லும் எந்த கதையின் கதாபாத்திரமும் பேச கூடிய சக்தியை பெற்றிருந்தன. எலி பேசுற மாதிரி சீன்ல பாட்டி எலி மாதிரியே கீச்சு கீச்சினு பேசிக் காட்டுவாங்க. சிங்கம் பேசினா உறுமல் சத்தம் ப்ளஸ் அதிகார தோரணையோட பேசிக் காட்டுவாங்க. ஏனோ பாட்டி சிங்கம் பேசுற மாதிரி பேசும்போது மட்டும் எனக்கு எங்க தாத்தா நியாபகம் வரும். பாட்டி பெரும்பாலும் கதை சொல்ல இரவு நேரத்தையே தேர்ந்தெடுத்திருந்தாள். அலுப்புத் தட்டாமலும் அதே நேரம் தூக்கம் வரவைத்தளும்னு, பாட்டி கதைகள் எப்போதும் தனிச் சிறப்பு.


                                              


எங்கள் இளம் பிராயத்தில் அம்மாவை விட நாங்கள் பாட்டியிடமே அதிகம் நேரத்தை செலவிட்டதாக நினைவு கதை மட்டுமல்ல பாட்டியின் கை பக்குவமும் அலாதியானது. அவள் காய்ச்சிய வெந்நீரே அவ்வளவு ருசியாக இருக்கும் என்ன விந்தையோ தெரியல. சரி நான் கதைக்கு வரேன், சில சமயம் பாட்டி கதைகள் நகைச்சுவை கலந்தும் சில சமயங்களில் சோகம் இழையோடவும் இருக்கும். அன்றைய பொழுது அவளுக்கு எப்படி போனதோ அதை பொறுத்து கதைகளின் களமும், கருவும் மாறும். பெரும்பாலும் அவள் கதைகள் அனைத்தும் சொல்லும் ஒரே நீதி தீயவர், கெட்ட சிந்தனை கொண்டவர் அழிவர் என்பது மட்டுமே. இடையிடையே பாட்டியின் சொந்தக் கதை சொல்லவும் மறக்க மாட்டாள். தாத்தாவை காரணம் பிடித்தது ஐந்து பெண்கள் பெற்று கடைசியாக ஒரு மகன் பெற்றது. சீர் கொண்டு வந்த கதை, பிள்ளைகளை சீராட்டி வளர்த்த கதை என அவள் சொல்லும் சொந்தக் கதைகள் இன்னும் சுவாரஸ்யம். பெரும்பாலும் அவள் சொந்தக் கதைகளை இரவு நேரங்களில் சொல்வதில்லை. பகலில் மட்டுமே சொல்லுவாள், இரவில் யாரும் கேட்பார்களோ என எண்ணுவாள் போலும். 




                                   

எங்கள் உணவு நேரங்களில், உணவோடு சேர்த்து கதைகளை பிசைந்து ஊட்டுவாள். கதை கேட்க்கும் ஆர்வத்தில் உணவு உள்ளிரங்குவது தெரியாமல் கொஞ்சம் அதிகப்படியாகவே சாப்ட்டிருப்போம். பின் எல்லோரும் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டாய்ற்று, படிப்பு, வேலை நிமித்தம் பாட்டியை விட்டு தூரம் இருக்களாணோம். வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை ஊருக்கு செல்லும் பொது பார்ப்போம். அப்படி ஒரு விடுமுறை நாளில் தான் பாட்டி இறந்து விட்டதை அண்ணன் சொன்னான். சலனமற்று கிடத்தப் பட்டு இருந்தது பாட்டியின் உடல். யார் கண்ணிலும் நீர் இல்லை தாத்தா, என் அம்மா ஏன் நான் உட்பட யார் கண்களும் கலங்கவில்லை. அமைதியான பார்வை கொண்டு நிலைத்து இருந்தோம்.

பாட்டியை புதைக்கும்போது அவள் கதைகளையும் சேர்த்துதான் புதைத்தோம். இந்த சீரியல் யுகத்தில், அர்ப்பனிப்பில்லாத நகர வாழ்க்கையில், ஒவ்வொரு பாட்டியும் புதைக்கப்ப்படும்போது ஆயிரமாயிரம் கதைகளும் புதைக்கப் படுகின்றன 

0 comments:

Post a Comment