Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Saturday, October 6, 2012

Dont Miss to watch English Vinglish and dont miss to read my Review


இங்க்லீஷ் விங்க்ளிஷ் படத்தைப் பார்த்து விட்டு வந்து உடனே இந்தப் பதிவை எழுதுகிறேன். ஸ்ரீதேவி – ஆஹா, எங்கிருந்தீர்கள் இவ்வளவு வருடங்களாக? மூன்றாம் பிறையின் மகோன்னத நடிப்பை இந்தப் படத்தில் மீண்டும் காணலாம். இது முழுக்க முழுக்கக் கதாநாயகிக்கான படம். வெளுத்து வாங்கியிருக்கிறார் ஸ்ரீதேவி. இந்த மாதிரி ஒரு பாத்திரமும், வலுவான கதையும், திரைக்கதையும் அமைந்தது ஸ்ரீதேவியின் அதிர்ஷ்டமே! I applaud Gauri shinde for her directorial achievement in her debut film! அவர் தாயின் கதையைத் தழுவி எடுத்ததனால் நம்பகத்தன்மை அதிகம் உள்ளது. What a sensitive portrayal by Sridevi and a sensitive handling of the subject by the director. Hats off to both of them!

எனக்கு கதை தெரிந்தால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து விடும். அதனால் நான் கதையை இங்கே கோடிட்டு தான் காட்டப் போகிறேன். ஸ்ரீதேவி இல்லத்தரசி, திறமையான பெண்மணி. ஆனால் ஆங்கிலம் தெரியாததால் குடும்பத்தினரால் ஏளனப் படித்தப் படுகிறார். அவருக்கு தனியாக அமேரிக்கா செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. அங்கு சென்று அங்கு உள்ள வாய்ப்புகளைப் பயன் படுத்தி எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்கிறார் என்பதே கதை. ஒரு இல்லத்தரசிக்குக் கணவனிடம் உள்ள எதிர்பார்ப்புகள், அவனின் உதாசீனம் தரும் மனக் கசப்பு, அதனால் வரும் தாழ்வு மனப்பான்மை, அதை சீர்படுத்த அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், தன்னம்பிக்கை மீண்டும் வர மிகத் தேவையானது என்ன, இவை அனைத்தையும் கோர்வையாக குறையொன்றும் இல்லாமல் தந்திருப்பது இயக்குனரின் திறமையையும் ஸ்ரீதேவியின் பங்களிப்பையும் காட்டுகிறது. திரையில் ஸ்ரீதேவி இல்லை, சஷிதான் உள்ளார்.

அஜித் கெஸ்ட் ரோலில் வருகிறார். என்ட்ரி ஆகும்போதே திரை அரங்கில் விசிலும் கைதட்டலும். சிறிய ரோலாக இருந்தாலும் அற்புதமாகப் பண்ணியுள்ளார்.  அவர் இமேஜுக்கு ஏத்த ரோல், ஆதலால் நல்ல fit

எதுவுமே மிகை இல்லாமல் இருக்கிறது. No melodrama. அமெரிக்க வாழ்க்கை முறை, அங்கு ஸ்ரீதேவி செல்லும் வகுப்புகள், அனைத்தும் இயல்பாக உள்ளது. ஸ்ரீதேவி பல இடங்களில் பிற மொழியாளர்களிடம் தமிழிலும், அவர்களும் பிற மொழியில் ஸ்ரீதேவியிடம் உரையாடியும் எண்ணங்களை உணர்ந்து கொள்வது போல காட்டியிருப்பது,only shows that  language is no barrier to emotions which is common to all.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இயக்குனர் ஒரு பெண்ணாக இருப்பது தான். பெண்ணின் கோணத்தில் இருந்து சிறப்பாக எடுத்துள்ளார். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணம் நானும் ஒரு பெண்.

ரசூல் பூக்குட்டி sound mixing. ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. உடை அலங்காரம் அருமை. ஸ்ரீதேவியின் புடவை செலக்ஷன் அவருக்கு அவ்வளவு அம்சமாக உள்ளது.

குறைகள் என்று பார்த்தால் இந்தி டப்பிங் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தித் திருமணம், இந்தி நடிகர்கள். பாடல்கள் சுமார் ரகம், ஆயினும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

அனால் படம் ஒரு கவிதை. It makes a big impact on you when you leave the theatre.

0 comments:

Post a Comment